Cinema Diary


Thuppakki (2012) : ஒரு வழியா போன வாரமே பார்த்தாச்சுங்க..பொதுவாகவே விஜய் என்ற நடிகனை காதலுக்கு மரியாதை பார்த்தது முதல் காதலித்து வந்த அனுபவமெல்லாம் உண்டு..நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்காது பேரரசு, பிரபு தேவா போன்ற மசாலா (கழுத்தை அறுக்குற டைரக்டர்ஸ்) படங்களில் நடித்து வர கடந்த சில வருடங்களாகவே ஒரு ரசிகனாக கோபம் கொண்டுதான் திரிந்தேன்..இடையில் வந்த சங்கர் படமான நண்பன் சற்று (இல்ல பெரியவே) ஆறுதல் வழங்கியது..அதைத் தொடர்ந்து துப்பாக்கி..மீண்டும் விஜயை ஆக்சனுக்கு அழைத்து சென்றிருக்கிறது.

கதை அளவில் பெருசா எதுவும் கிடையாது..பல ஆண்டுகளாக பார்த்த தீவிரவாதம்-தான் கதைக்கரு.வேகமாக திரைக்கதையை நகர்த்தினாலே வித்தியாசங்களை ரசிகர்கள் எதிர்ப்பார்க்க மாட்டார்கள் என்ற நிலைமை தமிழ் சினிமாவில் நிகழ்கிறது.அந்த வேகத்துக்கும் முட்டுக்கட்டையாக சில காதல் சாரிங்க, காஜல் காட்சிகளும் பாடல்களுமே இருந்துப் போய்விடுகிறது.மற்றப்படி படத்தில் ஏதாவது புதுமை உள்ளதாகவும் தெரியவில்லை. ஆனால் படமெங்கும் எந்த இடத்திலும் "என்னடா போரடிக்குது"-னு ஒரு சீனிலும் தொய்வும் இல்லை.அதுதான் படத்தின் வெற்றிக்கு முதன்மை காரணம்.

ஜெயராம் வரும் காட்சிகளை ரசித்தேன்..ஒரு சிறந்த நடிகனை காமெடி பீஸாக காட்டுவது தமிழ் சினிமா தொடர்ந்து செய்து வரும் சாதனை..ஆனால் அதையும் அல்லேக்கா செய்யுறாரு ஜெயராம்..காமெடி என்ற அளவில் சத்தியன் தேவையே இல்லை..தனியாக காட்சியும் இல்லை..ஹீரோவுடனே வருகிறார். மற்ற யாருக்கும் மூளையே இல்லாத மாதிரி மொத்த ஊருக்கும் சேர்த்து விஜயே எல்லா யோசனைகளையும் புத்திச்சாலி வேலைகளும் செய்வது..என்ன சொல்றது..போங்க.ஏழாம் அறிவு மாதிரியே இந்த படத்திலும் போலிஸூக்கு வேலையே இல்லை.

மொத்தத்தில் துப்பாக்கி விமர்சனமெல்லாம் இதுவா நினைக்காதிங்க..சின்ன குறிப்புதான்..பலரும் சினிமா வலைகளில் விமர்சனம் பண்ணிட்டங்க. துப்பாக்கி நல்ல படம் என்பதில் சந்தேகமில்லை..மேலே சொன்ன குறைகளை தவிர நிறைகளும் படத்துல உண்டு.அதுவும் இந்த வருடம் நம்மை ஏமாற்றிய "நடிகர்களின்" படங்களொடு ஒப்பிட்டால் துப்பாக்கி..certainly..one of the best movie of 2012.அப்புறம் விஜய் இந்த படத்துல செம்மையா தெரியுறாரு.எல்லாம் சந்தோஷ் சிவனின் கேமரா மாயைகள்.. 
@@==========================================================================================================================@@
Sleeping Beauty (2011) : ஆஸ்திரேலியா நாட்டு படமிது..யூனிவெர்சிட்டி இளம் மாணவியான லூசியின் கவர்ச்சி வாழ்க்கையை பற்றி பேசும் கதை..பெற்றோர்கள் இல்லாமல் பணத்துக்காக விலைமாது தொழிலுக்கு போகும் ஒரு பெண்ணை பற்றியும் அவள் வாழ்வில் சந்திக்கும் மனிதர், நிகழ்வுகளை அலசும் படம்.லூசியாக Emily Browning..பல நடிகைகளோடு போட்டிப்போட்டு படத்துக்கான கதாபாத்திரத்துக்கு தேர்வாகிருக்கிறார்.அடக்கமான நடிப்பு..அம்சமான முகம்..பார்க்கவே பரிதாபமாக தெரியும் அவரது அம்சம், காட்சிகள் நகர கதையிலும் "ச்சே பாவம்" என சொல்லத் தூண்டுகிறது.

சென்ற (2011) வருடம் கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட பொழுது அங்கேயே பலரது கைத்தட்டல்களை வாங்கிய படமிது.இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1968 ஆம் வருடம் வெற்றிக்கொண்ட ஜப்பானிய எழுத்தாளரான Yasunari Kawabata அவர்களின் The House of the Sleeping Beauties (1961) நாவலை கொஞ்சம் கூடுதலாகவே மாற்றம் செய்து படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனரான Julia Leigh..ஒரு பெண் இன்னொரு பெண்ணின் உணர்ச்சிகளை, அவளது எண்ணங்களை வண்ணங்களாக்கி திரையில் ஓடவிட்டதை ஒரு கணம் உணார முடிந்தது.அவரது முதல் படமாம்..பற்றாக்குறைக்கு ஒவ்வொரு சீனையும் முடிந்த வரை ஒரே டேக்கில் படமாக்க முயன்றிருக்கிறார்கள்..பாராட்ட வேண்டிய விஷயமே.

வழக்கமான வெளிநாட்டு படங்களை போலவே டிராமா வகையில் மெதுவாகவே நகர்ந்தாலும் ஏதோ ஒரு மயக்கம் படம் முழுவதும்..நிர்வாண காட்சிகளை தவிர்க்க முடியாத கதைக்களம்..பல விமர்சன ரீதியில் நல்ல மதிப்பை பெற்றுள்ளது குறிப்பிடதக்கதாகும்..ஒரு முறையாவது டைம் இருப்பின் பார்க்கலாம்..     

Its Alive (1974) : பிறந்த குழந்தை கொலைக்காரனாக மாறி சுற்றியுள்ளவர்களைப் போட்டுத்தள்ளும் கதை.பழைய படமாக, சமீப காலத்தில் இதுப்போல நிறைய திரைக்கதையில் படங்கள் வந்துட்டதாலும், அவ்வளவு புதுமையாக சொல்வதற்கு ஏதும் இல்லங்க.இருந்தாலும் பதிவேதும் பண்ணினால் சொல்ல முயற்சி செய்கிறேன்.  

Fanaa (2006) : பதிவர் அருண் அவர்கள், "படம் பாருங்க..நல்ல படமுன்னு" சொல்லவே தைரியத்தோடு பார்த்தேன்.ஏமாறவில்லை..கஜோல் கண் தெரியாதவங்க..நம்ம அமிர் கான் கவிதையா சொல்லி அவங்கள மயக்கி கடைசில எப்படியோ ஏமாத்திடுறாரு...அவங்க ரெண்டு பேரும் சேர்ந்தாங்களா ? அதான் கதை.ஏதோ காதல் டிராமா போல எண்ணி பார்க்கவே படம் எங்கோ திரில்லர், தீவிரவாதத்தை மையப்படுத்தி போகுது.அழகான பொழுது போக்கு படம்.அமிர் - கஜோல் கெமிஸ்ட்ரி சும்மா சொல்லல..பின்னிட்டாங்க.ரெண்டு பாடல் மனசுல ஓடிட்டே இருக்கு.

Devdas (2002) : ரொம்ப நாட்களாக பார்க்க நினைத்த படம்.ஒரு வழியாக டிவியில் பார்க்க கிடைத்தது.சாருக், ஐஸ் நடிப்பில் 2002ல் வந்த ஒரு எப்பிக் லொவ் ஸ்டோரி என்று சொல்லலாம்...அதாங்க நமக்கு எல்லோருக்கும் பரிச்சயமான தேவதாஸ், பார்வதி காதல் மசாலா-தான் படம்.காஸ்ட்டிங், ஒளிப்பதிவு, கலை மனதிலேயே நிற்க்கிறது.பாடகி ஸ்ரேயா கோஷல் அறிமுகமாகி, தேசிய விருதையும் தட்டிச்சென்ற பாடல்களை கொண்ட படமிது.சும்மா சொல்லக்கூடாது நடிப்புக்காகவே பார்க்கலாம்.

Raat (1992) : ஹிந்தி இயக்குனர் ராம் கோபால் வர்மா அவர்கள் தனது திரையுலக ஆரம்பக்காலத்தில் இயக்கிய ரேவதி ஹூரோயினாக நடித்த ஹாரர் படம்..சிறிய வயதில் என்னை பயமுறுத்திய படம்..நள்ளிரவில் பார்த்து முடியவே 3.30 ஆகிவிட்டது.(நல்ல வேளை கெட்ட கனவு வராம தப்பிச்சேம்ப்பா சாமி).நான்கு பேரை கொண்ட குடும்பம், அவர்கள் புதிதாக குடி வரும் மர்ம வீடு..அதுதான் கதைக்களம்.அதை வைத்துக்கொண்டே திரைக்கதையை வலுப்படுத்தி கொண்டு போக முயற்சி செய்துள்ளார்கள்.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, அமானுஷ்யத்தை மையப்படுத்தி வந்த நிஜமான ஹாரர் பீஸ்களில் கொஞ்சம் அலர வைக்கும் பீஸ்தான் இந்த ராட்.ரேவதி மிரட்டிருக்கிறார்


Trust (2010) : கடந்த சில வாரங்களில் இவ்வளவு உணர்வு மழைகள் பொழிய, ஒவ்வொரு காட்சியிலும் உள்ச்சென்று இந்த படமளவுக்கு பார்த்ததாக தெரியவில்லை.இந்த காதல் செய்யும் லீலைகள் என்னென்னவோ ? இணையம், போன் போன்ற நவீன தொழில்நுட்பத்தால் ஒரு பக்கம் உலகம் முன்னேற, ஒரு பக்கம் அழிவு ? அதற்கு தப்பாமல், சேட்டிங்கில் தொடங்கி டேட்டிங் வரைக்கும் சென்று பெரிய கேஸில் மாட்டிக்கொள்ளும் 14 வயது நிரம்பிய பள்ளி மாணவியின் கதைதான் இப்படம்.நேரமிருபின் ஒரு சிறுப்பார்வையாக இப்படத்தை பார்க்கலாம்.

@@==========================================================================================================================@@

Kaathalikka Neramillai (1964) Tamil


மலேசியாவில் பிறந்து தமிழ் நாட்டில் 60, 70 ஆண்டுகளில் முன்னனி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த ரவிச்சந்திரன் நடித்த பல படங்களை பார்த்திருந்தாலும், காதலிக்க நேரமில்லை படத்தை மறக்கவே முடியாது.அதிகமாக பார்த்து ரசித்த பழைய படங்களில் ஒன்றிது.1964-ஆம் ஆண்டு புதுமை இயக்குனர் சிவி.ஸ்ரீதர் அவர்களின் கைவண்ணத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஸ், ரவிச்சந்திரன், முத்துராமன், காஞ்சனா போன்றவர்களின் நடிப்பில் புது முத்திரையை பதித்த படமாக கருதப்படுகிறது.

இன்றளவும் மனதுக்கு சலிப்பு தட்டாத காட்சி, வசனங்கள், பாடல்கள் புதுமை மற்றும் புத்திசாலித்தனமும் நிறைந்த இயக்கம் என்று இன்றளவும் என்னை போன்ற சிறு வயதினர்களை கவரும் விதத்தில் அன்றே எடுத்திருப்பதை நினைக்கும் பொழுது வியப்பாக இருக்கிறது..மெல்லிசை மன்னரின் பாடல்களுக்கு காலம் கடந்த ஒரு சலூட்.கேமரா கோணங்கள் அருமை..அருமை.

எனக்கு மிகவும் பிடித்த இயக்குனராக ஸ்ரீதர் அவர்களை சொல்லலாம்..அந்த காலத்திலேயே இவரது திரைக்கதை யுக்தியும் எளிமையான கதையில் புதுமைகளை புகுத்துவதும், நடிகர்களை தத்தம் கதாபாத்திரங்களில் அமைய செய்து இயக்கும் பாணியும் என்னை வெகுவாக கவர்ந்த ஒன்று.

தேனிலவு, நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்களை என்னால் மறக்கவே முடியாது..அதனது பாடல்களுக்கும், காட்சியமைப்புகளுக்குமே என பல முறைகள் தொலைக்காட்சியில் பார்த்து ரசித்த அனுபவங்கள். ஆங்கிலத்தில் ரோப் என்ற படம் பலருக்கும் நினைவிருக்கலாம்.ஒரே செட்டில் முழு படத்தையும் அட்டகாசமாக திரைவடிவம் கொடுத்திருப்பார் ஹிட்ச்காக்..அதே போல நெஞ்சில் ஓர் ஆலயம், ஒரே வளாகத்தில் சிறப்பாக கதையை வடித்திருப்பார் ஸ்ரீதர் அவர்கள்..அதை தொடர்ந்து தேனிலவு திரைப்படம்..மறக்கவே முடியாத பாடல்கள்..நெஞ்சம் மறப்பதில்லை, அந்த காலத்தில் இம்மாதிரி படம் வந்திருக்குமா என தெரியவில்லை.பூர்வ ஜென்மத்தை பற்றி திறம்பட எடுத்திருப்பார்.நம்பியாரின் நடிப்பு அபாரமாக இருக்கும்.

இவற்றை எல்லாம் விட நான் பார்த்தவரை ஸ்ரீதரின் சுமைத்தாங்கி..பல நேரங்களில் Underated செய்யப்பட்ட படம் என்பது தனிப்பட்ட கருத்து.

10 comments:

  1. வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சகோதரி..

      Delete
  2. நன்றாக இருக்கிறது சினிமா டைரி.
    தொடரவும்.
    வாழ்த்துக்கள் குமரா.

    ReplyDelete
  3. ரொம்ப நன்றிங்க அண்ணா..தொடர்ந்து வாங்க.

    ReplyDelete
  4. சினிமா டைரி - இது நல்லா இருக்கே! தொடர்ந்து எழுதுங்கள் :-)

    ReplyDelete
    Replies
    1. உங்க வருக்கைக்கு ரொம்ப நன்றிங்க பேபி..உங்க துப்பாக்கி விமர்சனம் ரெண்டு பாகங்களும் அருமை..தொடர்ந்து வாங்க..

      Delete
  5. துப்பாக்கி, ஃபானா ரெண்டும் பார்த்திருக்கேன்.. பிடிச்சிருந்திச்சு! ஒரே பதிவுல இவ்வளவுத்த அறிமுகப்படுத்தினா திக்காவுது.. சமீபத்தில் பார்த்த படங்களைப் பத்தித்தான் எழுத இந்த செகஷன்னா, எதிர்பார்த்து மொக்கையான படங்களையும் அப்பப்போ திட்டித் தீர்க்கலாமே.. வாசிக்க இன்ட்ரஸ்டாவும், avoid பண்ணவும் வசதியாவும் இருக்கும்!
    trust பார்க்கனும். ஏற்கெனவே நண்பர் ராஜும் சொல்லியிருந்தாரு! மெமரியில போட்டுக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. கரைக்ட்டா சொல்றீங்க நண்பா..இந்த செக்க்ஷன் சமீபத்தில் பார்த்த படங்களின் சிறு தொகுப்புதான்..நேரமிருந்தா அப்பப்ப அப்டெட் பண்ணுவேன்..ரெண்டு நாள் முன்னாடிதான் பிஸ்ஸா படம் பார்த்தேன்.எழுதலானு நெனைக்கிறேன்..தொடர்ந்து வாங்க..நீங்களும் பதிவேதும் போடுங்க.நன்றி.

      Delete
  6. சின்னதாக இருந்தாலும், அருமையான விமர்சனகள் குமரன். முதல்ல நம்ம நண்பர் அருண் பிரகாஷ் அவர்களை ஒரு பதிவு போட சொல்லுங்கள். நானும் 'புதுப்பதிவு ஒன்னு போடு டா' என்று சொல்லிப் பார்கிறேன். கேட்க மாட்டேங்கிறார். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்க வருகைக்கு மிக்க நன்றி..நானும் அவருக்கு ரெண்டு தடவ மெயில் பண்னதா ஞாபகம்..ஒரு பதிலும் இல்லங்க..அவர்ட்ட நீங்க சொல்லுங்க..அவரு எப்படி இருக்காரு ? நீங்க நலமா ? தொடர்ந்து எழுதுங்கள்..

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...