Tuesday 8 November 2016

Tell Me How I Die (2016)

தி ஷைனிங் படத்தில் Maze ஒன்று வரும்.யாராவது உள்ளே நுழைந்தால் எப்படி வெளியே வருவதென்று என்று தெரியாமல் கொஞ்ச நேரம் திக்குமுக்காட வைக்கும்படி அமைத்திருப்பார் குப்ரிக்.கிளைமக்ஸ் காட்சி அந்த Maze-ல்தான் நடக்கும்.


அதே Maze மாதிரி ஒரு இடத்தில் ஒரு சீரியல் கொலைக்காரனோடு நீங்கள் மாட்டிக்கொண்டால் எப்படி இருக்கும்?அதுவும் எப்படி சாகப்போகிறோம் என்ற Previson-னோடு உள்ளேயே அடைப்பட்டு உயிருக்கு போராட நேர்ந்தால் நமது உணர்வு எப்படி இருக்கும்?
அதை பார்க்க வேண்டுமானால் டிஜே வியோல இயக்கத்தில் வந்த டெல் மீ ஹௌ ஐ டை படம் பாருங்க.

Maze-க்கு பதிலாக இங்கு மருத்துவ ஆராய்ச்சி கூடம்.ஆனால் அதே விண்டெர்.
புதிதாக கண்டுபிடித்த மருந்தை சோதிக்க சில கல்லூரி மாணவர்களுக்கு சம்பளம் கொடுத்து பரிசோதனைக்காக அழைத்து வருகிறது ஹாளரொன் நிறுவனம்.ஆராய்ச்சி கூடத்தை விட்டு வெளியேறவும், உள்ளே நடக்கும் விஷயங்கள் வெளியே சொல்லக்கூடாது என்றும் பல கட்டளைகள் விடுத்து கைத்தொலைப்பேசி உட்பட வாங்கிக்கொள்கிறார்கள்.அதே வேளை தங்குபவர்களுக்கென்று அனைத்து சௌகரியங்களும் செய்துக் கொடுக்கபடுகிறது.பரிசோதனை தொடங்க, சில டிரக்-மருந்து ஊசிகள் இவர்களுக்கு ஏத்தப்படுகிறது.புதிய சூழலை சந்தோஷமாக கடக்கும் மாணவர்களுக்கு அடுத்து சில அதிர்ச்சிகள் ஆரம்பிக்கிறது.
அந்த குழுவில் இரு மாணவர்க்கு எதிர்க்காலத்தில் நடக்க போகும் சில காட்சிகள் வந்து போகின்றது.இது கனவா?நிஜமா என்ற கேள்விக்கு நடுவே டாக்டரும் இது பெருசா இல்லையென்று மழுப்புகிறார்.

ஹீரோயினான அன்னா-வின் PreVision உச்சமையடைய, சில நண்பர்கள் சேர்ந்து அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்க போய், ஒரு சீரியல் கொலைகாரனிடம் மாட்டிக்கொள்கிறார்கள்..ஒவ்வொருவராக கொலை செய்யப்பட, கொலைகாரன் யார்?அந்த ஆராய்ச்சி கூடத்தில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் யாவை போன்ற கேள்விகளுக்கு படம் பதில் சொல்லும்.

சீரியல் கொலை படங்கள் ஹாரர் உலகுக்கு புதிதில்லை.ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிலர் சிக்கிக்கொள்வதும் அவர்களை "ஏதோ" வேட்டையாடுவது போலான கதைகள் எல்லாம் அகாதா கிரிஸ்டி காலம் தொட்டே எடுக்கப்பட்டு ஹாலிவுட்டில் நிரம்பி கிடக்கிறது.இன்னமும் இது போன்ற படங்களை எடுக்கும் அதைவிட ரசிக்கும் கூட்டம் இருப்பதுதான் பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.
  
காடு, வீடு, ரோடு என்று எப்படி-எங்கெல்லாம் எடுக்க முடியுமோ அப்படியெல்லாம் உருவாக்கி விட்டார்கள். சிறிது வித்தியாசத்துக்கு இதில் ஆராய்ச்சி மையம்-கொடுக்கபடும் டிரக்ஸ்.படம் பார்த்த டைம், வேஸ்ட் ஆகவில்லை என்ற உணர்வை கிளைமக்ஸ் டிவிஸ்டு தரலாம்.படம் தொடங்கி 30 நிமிடங்களுக்கு பிறகு டிரில் கிளம்பிவிடும்.
  

வழக்கமாக சின்ன பட்ஜெட்டில் பி லிஸ்ட் நடிகர்கள்-கலைஞர்கள் உருவாக்கும் படங்கள் அமெரிக்காவை தாண்டி வெளிநாடுகளில் பெரிய வெற்றியெல்லாம் பெறுவதில்லை.அதனால்தான் என்னவோ இது போன்ற படங்களை பார்க்க தவறி விடுகிறோம்.இவை பெரும்பாலும் Average ஆகவே இருக்கும் என்பது சின்ன ஆறுதல்.நம்ம தமிழ் சினிமாவின் "ஏ" தர டிரிலர்கள் பல நேரம் இவர்களது "பி" லிஸ்ட் டிரிலர் தரத்தில் இருப்பதாகதான் தோன்றுகிறது.

என் அண்ணன் படத்த பார்த்துட்டு காப்பி ஒன்னு தந்தாரு.அந்த மாதிரி யாராவது உங்ககிட்ட கொடுத்தா இல்ல 5 படம் ஒரு டிவிடினு கலெக்ஸன்ல கிடைச்சா பாருங்க.மேல கதை படிச்சு புடிச்சாலும் பாத்துருங்க.

அப்புறம் யாராச்சும் மருந்து டெஸ்ட் பண்றேன்-காசு கொடுக்குறேன் வறீயா என்று கேட்டா...உஷார்.   
Related Posts Plugin for WordPress, Blogger...