Friday 7 August 2015

The Howling (1981)


ஹாலிவுட்டில் ஹாரர் படங்களுக்கு பஞ்சமே இல்லை.புதுசு புதுசா எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு அரைத்த மசாலாவையே திருப்பி திருப்பி தயாரிக்கிறது-ல மன்னர்கள்.அதிலும் இந்த டிராகுலா, ஓநாய் மனிதனாகும் கதையெல்லாம் சொல்லவே வேண்டாம்.இதெல்லாம் பார்த்து தாங்க முடியாது விமர்சகர்களும் பல படங்களை மாங்கு மாங்குனு குத்தி-கிட்டு இருந்தாலும் "நான் விடமாட்டேனு" இன்னமும் மௌசு குறையாது சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது என்றால் ஆச்சரியம்தான்.அந்த வரிசையில் 1981-ம் ஆண்டில் வந்ததுதான் தெ ஹௌலிங்.ஹாலிவுட் பேந்தசி, சின்ன பிள்ளைகள் படங்கள் பார்த்து வருபவர்களுக்கு கொஞ்சமாவது அறிமுகமான பெயராக இயக்குனர் ஜோய் டாந்தே-வை சொல்லலாம் (படத்துல எனக்கு வேற யாரையும் தெரியாதுப்பா)..காரணம் இவர்தான் ஸ்பீல்பெர்க் தயாரித்த க்ரேம்லின்ஸ் படத்தை எடுத்த புண்ணியவான்..(இத நான் நொந்துப்போய் சொல்றேன்).இவர் எடுத்த ரொம்ப சீரியஸான படங்களில் இதுவும் ஒன்றாம்.இப்படம் Gary Brandner என்பவரால் 1977-ல் எழுதப்பட்ட நாவலை தழுவி வந்தது குறிப்பிடதக்கது.

காரேன் வைட், லாஸ் ஏஞ்சல்ஸில் செய்தி தொகுப்பாளராக பணி செய்து வருபவர்.எதிர்ப்பாரா விதத்தில் எடி என்ற சீரியல் கில்லரின் தொடர்பில் காரென் சிக்க, பின்னர் போலிஸாரால் சுட்டு கொல்லப்படுகிறான் எடி.சம்பவம் நடந்த அதிர்வில் காரனின் மூளை பாதிக்கிறது.இந்த சூழலில் சரிவர வேலையும் செய்ய இயலவில்லை..வேறென்ன? டாக்டர்தான்.அவரு "காலெனி" என்ற இடத்துக்கு டிரீட்மெண்டுக்கு அழைத்து வராரு.கூடவே காரெனின் கணவன்.அங்கு நிகழும் மர்மங்கள்,. ரகசியங்கள் இதுதான் மீதக்கதை..நம்மை கவருவதற்காகவே விறுவிறுப்பான திரைக்கதையில் பயணித்த படக்குழுவினர்களுக்கு நன்றிகள்.

படத்தின் பெரிய பலமாக விளங்குவது கிராப்பிக்ஸ்..அதுவும் வருவது கடைசி காட்சிகளில்தான்.மனிதன் ஓநாயாக மாறுவதை ரொம்பவும் தத்ரூபமாக எடுக்க டிரை பண்ணிருப்பதே வரவேற்கதக்கது.குறிப்பாக, கதையில் ஒரு கட்டத்தில் ஓநாயின் கையை தெர்ரி என்பவர் வெட்ட, அது துண்டித்து மீண்டும் புதுப்பிக்கும் காட்சி அருமை..இப்படியே சில காட்சிகள் ஓரளவு கவர்ந்ததை வைத்து படம் ஓக்கே என்ற முடிவுக்கு வரலாம்.

படம் விமர்சகர்களிடம் மொக்கை அடி வாங்கும் என்று தெரிந்தே சேர்த்தது போல் ஓரிரெண்டு "அல்வா" காட்சிகள்.அந்த காலத்தில் ரசிகர்களை முக்கியமாக இளைஞர்களை ஈர்க்கும் சாதனமாக, வசூலும் ஆவதற்கு நல்ல உதவியாக இருந்திருந்தாலும் இருந்திருக்கும்.அதில் "ஐட்டம்" சீன் ஒன்று போதே நாயகர்கள் ஓநாயாக மாறுவது அசத்தல்.ரொமான்ஸ் மூடில் இருக்கும் பார்வையாளர்களை சற்று அதிரவும் செய்யக்கூடியது .எல்லாவற்றையும் தாண்டி Pino Donaggio-வின் பின்னனி இசை.ஒரு அமெரிக்கன் படத்துக்கு இந்த இத்தாலிக்காரர்-தான் பெரிய ஆறுதல்-நா பாருங்களேன்.என்ன இருப்பினும், சமீப காலத்தில் பார்த்த ஹாரர் படங்களில் தெ ஹௌலிங் ஓரளவு நல்ல ஃபீலிங் கொடுத்ததை தவிர்க்க முடியவில்லை. கண்டிப்பாக ஓநாய் படங்களின் வரிசையில் சிறந்த இடத்தை கொடுக்கலாம்..பல சினிமாக்களில் கண்ட காட்சிகளே இதிலும் ஓடினாலும் அதனை கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இசை, ஒளிப்பதிவு ஆகியவை கலந்து சுவாரஸ்யமாக தந்தது இயக்குனரின் வெற்றி.ஹாரர் நண்பர்கள் தவற விடவே கூடாத ஒரு கிளாசிக் படமாக இதை ரெக்கமண்ட் பண்றேன்.பாருங்க-ப்பா.

கொசுரு தகவல்: இந்த படம் கொடுத்த ஆறுதலில் அடுத்த பார்க்க போவது An American Werewolf In London (1981)..அதிலும் ஒருத்தன் ஓநாயா மாறுவானாம்..கதை படித்தேன்.பார்த்துட்டு பிடித்தால் வழக்கம் போல் மொக்க பதிவொன்று போடுறேன்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...