Friday 31 October 2014

The Estwood Factor (2010) - உலக சூப்பர் ஸ்டாரின் திரையுலகம்..

கிளிண்ட் ஈஸ்ட்வூட்

இவரை பற்றி தெரியாத சினிமா பார்வையாளர்கள் மிகவும் குறைவு..ஹாலிவுட் என்கின்ற உலகை தாண்டி சர்வதேச அளவில் சினிமாவின் முதன்மை தர சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக திகழ்பவர்..எந்த ஒரு நடிகருக்கும் உலகளவில் ஒரு உதாரணமாகவும் எடுத்துக்காட்டாகவும் வாழ்பவர்..அதே வேளை, உலக மக்கள், விமர்சகர்கள் என்று அனைவரையும் கவர்ந்த ஒரு உன்னத திறம் படைத்தவர்

ஒரு நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக, கதை, திரைக்கதை எழுத்தாளராக மட்டுமின்றி இசை அமைப்பாளராகவும் பல அவதாரங்களை எடுத்து தான் ஒரு மிகச் சிறந்த கலைஞர் என்பதை சினிமா உலகத்துக்கு ஒவ்வொரு முறையும் உணர்த்தி வருபவர்..சினிமாவில் இவர் செய்த சாதனைகளும், முயற்சிகளும், வென்ற விருதுகளுமே அதற்கு சான்று.சார்லி சாப்ளின், ஒர்ஸொன் வெல்ஸ் போன்றவர்களுக்கு பிறகு ஒரு நடிகனாலும் பல பிரிவுகளில் கொடிக்கட்டி நிற்க முடியும் என்பதற்க்கு பல கலைஞர்களுக்கு உதாரணமாக விளங்குபவர்..நான் இங்கு சொல்லும் அனைத்தும் மிகைப்படுத்து வண்ணம் இருக்கலாம்..ஆனால், இதைவிட பல பேரும் புகழையும் பெற்று வாழ்ந்து வரும் எ லிவிங் லஜெண்ட்.       

சமீபத்தில் பார்வைகளில் சிக்கிய அற்ப்புதமான டோக்குமெண்டரி  திரைப்படம்..
ஈஸ்ட்வூட்டின் ரசிகன் என்ற முறையில் அவர் நடித்து, இயக்கிய திரைப்படங்களை பற்றி மேலும், பல தகவல்களையும் அனுபவங்களையும் அறிந்துக்கொள்ள உதவியாக அமைந்த ஒன்று.. 2010 ஆம் ஆண்டில் Richard Schrickel எழுதி இயக்கிருக்கும் இந்த ஆவண படம், பல முக்கியமான ஈஸ்ட்வூட்டின் திரையுலக வாழ்க்கையை மாற்றியமைத்த சிறந்த  திரைப்படங்களை பற்றி பேசுகிறது..இதில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், இப்படம் முழுக்க பின்னனி குரலில் பல தகவல்களை பரிமாறிக்கொள்ளும் மோர்கன் ஃப்ரீமனின் குரல்தான்..ஈஸ்ட்வூட்டின் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததோடு மில்லியன் டோலர் பேபி என்ற படத்துக்கு ஆஸ்கர் வென்றவருமான ஃப்ரீமனின் குரல் ஆவணத்தோடு நம்மை வெகுவாக இணைக்கிறது.

  கிளிண்ட் ஈஸ்ட்வூட்டை பற்றி தெரிந்துக்கொள்ள என்னும் ஒவ்வொரு ரசிகரும் கட்டாயமாக பார்க்க வேண்டிய ஆவனங்களில்  இதுவும் ஒன்று..முதல் சில காட்சிகளில் தன்னுடைய ஆரம்ப கால திரைப்பட அறிமுகங்களை பற்றி பேசும் ஈஸ்ட்வூட், தன்னுடைய தந்தையை பற்றியும் சில வார்த்தைகள் பகிர்ந்துக்கொள்கிறார்.கூடவே, தன்னுடைய சிறிய வயதில் தனக்கு பிடித்த சில நடிகர்கள் மற்றும் திரைப்படங்களை பற்றியும் பேசுகிறார்..

60 ஆண்டுகளில் எடுக்கபட்ட டோலர்ஸ் டிரைலோஜியில் பெயரில்லாத கதாபாத்திரத்தில் நடித்து உலக பார்வைகளை தன் பக்கம் இழுத்துக்கொண்ட ஈஸ்ட்வூட் 70 ஆண்டுகளில் ஒரு இயக்குனராகவும் அவதாரம் எடுக்க தொடங்கினார்..

70 ஆம் ஆண்டுகளில் இவர் இயக்கி நடித்த புகழ்பெற்ற ஆக்சன் படமான Dirtty Harry (1971) மற்றும் அதனை தொடர்ந்து வந்த Sudden Impact (1975), Magnus force (1973), The Enforce (1976) போன்றவைகளின் மூலம் சினிமா உலகின் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்ததோடு அதன் கதைகளம், கதாபாத்திரம் மற்றும் சில சுவையான தகவல்களையும் இந்த ஆவண திரைப்படம் நமக்கு சொல்கிறது..அதே போல 80 மற்றும் 90 ஆண்டுகளில் வெளிவந்த Pale rider (1985), Tight Troope (1984), heartbreak Bridge (1986), Bird (1988), Unforgiven (1992), A Perfect World (1993) விருதுகள் வசூல் என்று சக்கை போடு போட்டது மிகப் பெரிய சிறப்பு..இந்த காலகட்டத்தில் இவர் எடுத்த பெரும்பாலான படங்கள் ஆக்சன், கௌபாய் என்ற வகைகளில் சார்ந்து இருக்கும் வேளையில், பேர்ட், எ பெர்ஃபெக்ட் வேல்ட் போன்ற படங்கள் சற்று விலகி வந்து அதற்குரிய பாணியில் தனித்து நின்றன.இதில் ஒரு இசைக் கலைஞனின் வாழ்க்கையை படம் பிடித்து காட்டிய பேர்ட் படம் கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த படத்துக்காக பரிந்துரைக்கபட்டது குறிப்பிடதக்கது..

என்னதான், பல ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து உலகளாவிய நிலையில் விருதுகளை வாங்கி நல்ல அங்கிகாரம் கிடைத்த போதிலும் ஈஸ்ட்வூட்டின் திரைவாழ்வில் பெரிய குறையாக இருந்தது ஆஸ்கர்தான்..ஒவ்வொரு கலைஞனின் உயர்த்தர கனவான இந்த ஆஸ்கர் விருதும், 1992 - ஆம் ஆண்டு ஈஸ்ட்வூட்டின் கதவை தட்டியது..இத்தனை ஆண்டுகள் தட்டி கழிந்ததாலோ என்னவோ ஒரே படத்தில் சிறந்த இயக்கம், திரைப்படம் என்று இரண்டு விருதுகள் அவரது விருது பசியை தீர்த்துவைத்தன..அதோடு, 2004 ஆம் ஆண்டு வந்த மில்லியன் டோலர் பேபி படத்தின் மூலமும் ஈஸ்ட்வூட் மேலும் இரண்டு ஆஸ்கர்களை பெற்றுக்கொண்டார்..மேற்ச்சொன்ன பிறகு குறிப்பிடாத நிறைய தகவல்கள் மற்றும் அனுபவங்களை மிகவும் சிறப்பாக இந்த ஆவணம் நமக்கு சொல்கிறது


=========================================
==============================================

இவ்வாவணத்தில் மேலும் சில கூடுதல் சுவாரஸ்யங்களாக படப்பிடிப்பு நடந்த இடங்கள், ஸ்டுடியோக்கள் என்று காட்சிகள் எடுக்கபட்ட இடத்துக்கே கொண்டு சென்று காட்டுகிறார் ஈஸ்ட்வூட்..மேலும், ஈஸ்ட்வூட்டின் ஆஸ்த்தான திரைப்பட உடை அலங்கார நிபுணரான Deborah Hooper அவர்கள் சேர்த்து பொக்கிஷம் போல பாதுகாத்து வரும் ஈஸ்ட்வுட்டின் ஆயிரம் கணக்கான மெமரபல் உடைகளை பார்க்கின்ற வாய்ப்பை இத்திரைப்படம் பெற்று தருகிறது.இதில் ஒரு காமெடி என்னவெனில் ஈஸ்ட்வூட் அணிந்த ஆடைகள் அவருக்கே நினைவில் இல்லை..அத்தனை படங்களிலிருந்தும் ஆயிரம் ஆயிரம் ஆடைகள்..எல்லாமே கண்டிப்பாக பொக்கிஷம்தான்..

சுமார் ஒன்றைரை மணி நேரங்கள் ஓடும் இத்திரைப்படம், 1971 - ஆம் ஆண்டு ஆரம்பித்து 2009 - ஆம் ஆண்டு  வரையில் கிளிண்ட் ஈஸ்ட்வூட் என்னும் மகத்தான கலைஞனின் புகழ்பெற்ற சிறந்த படங்களை பற்றிய பல சுவைகரமான அனுபவங்களை தெரிந்துக்கொள்ள துணை செய்கிறது இத்திரைப்படம்..கண்டிப்பாக, அனைவரும் பார்க்க வேண்டிய ஆவணம் இது.
===========================================================================================

ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்....மேலும், தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமெனின் ஓட்டளித்து ஊக்கமளியுங்கள்.சிறந்த ஆதரவுகளே சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு,

Related Posts Plugin for WordPress, Blogger...