Monday 17 March 2014

உலகம் அழிய இன்னும் 28 நாட்கள்..


@ Donnie Darko (2001) - United States
@ A Film By Richard Kelly
@ Starring : Jake Gyllenhaal, Jena Malone and Mary McDonnell

சக வலைப்பூ நண்பரான அருண் அவர்கள் பரிந்துரைத்த திரைப்படம்.ஒரு அட்டகாசமான திரில்லரை அறிமுகம் செய்து வைத்ததற்கே அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

Richard Kelly அவர்களது இயக்கத்தில் 2001-ஆம் ஆண்டு வெளிவந்த இந்த சைக்கலோஜிக்கல் சைன்ஸ் ஃபிக்ஸ்ன் திரைப்படத்தில் Jake Gyllenhaal, Jena Malone and Mary McDonnell ஆகியோர் நடித்திருக்கின்றனர்.ஒரு வசீகரம் மிக்க டோனி என்ற ஸ்கூல் பையனுக்கு, தினமும் கனவிலோ அல்லது நிஜத்திலோ வந்து அவனது மனக்குழப்பங்களை தூண்டி. தொடர்ச்சியான குற்றங்களுக்கு ஆளாக்கும் ஃப்ரேங்க் என்ற முயலுக்கும் இடையிலான உறவை, விபரீதங்களை பேசும் படம்தான் டோனி டார்கோ.


மிக நிசப்தமாக கேமராவின் அழகியலுடன் தொடங்கும் இப்படம் போக போக கொடுக்கும் அதிர்வுகள் அதிகம்.டோனி டார்கோ என்பவராக வந்து கலக்கும் Jake Gyllenhaal, என்னமா நடிக்கிறாரு இந்த பையன்.வினோதமான முகப்பார்வையில் படம் முழுவதையுமே அலங்கரிக்கிறார்.. காரணம் தெரியவில்லை, இவரது நடிப்பை பார்க்கும்போது கஜினி படத்துல சூர்யாவை பார்த்த மாதிரியே இருந்தது.  

உலக அழிவை பற்றி எடுக்கப்பட்டிருக்கும் எத்தனையோ ஹாலிவுட் மசாலாக்களை பார்த்திருப்போம்..அதில் பெரும்பாலானவை, பிரமாண்டத்தை குறிவைத்து வெறும் அழிவை மட்டுமே விவரிக்கக்கூடியவை. ஆனால், இந்த படம்.. யெப்பா... பல விஷயங்களை ரொம்பவும் அசார்த்தியமாக விளக்குகிறது..உலக அழிவை முக்கியமாக டைம் டிராவலை மையமாக கொண்டு வந்த முதல் பத்து சிறந்த படங்களை பட்டியல் போட்டால் கண்டிப்பாக இதற்கு ஓர் இடம் உண்டு.

ஒரு திரை இயக்குனரின் முதல் படம் எப்போதுமே சிறப்பாக அமைவதென்பது சாதாரணமல்ல.காரணம் பல நேரங்களில் அது வெறும் முயற்சியாகவே முடிந்துவிடும்..ஆனால், இந்த படம் விமர்சக, ரசிகர்கள் ரீதியில் மிகச் சிறந்த அங்கிகாரத்தை பெற்று இருப்பது ஒரு நிமிடம் ஆச்சரியமடைய வைக்கின்றது.இயக்குனரான Richard Kelly ஒரு சாதனையை படைத்திருக்கிறார்.கதாபாத்திரம், கதை, காட்சியமைப்புகள் அதை கொண்டு சென்ற பாணி என்று அத்தனையிலும் புதுமையை புகுத்துகிறார்..

பொதுவாகவே, டீன் ஏஜ் பசங்களை வைத்து பண்ணும் படங்கள் காமெடியாகவோ, கிண்டல் கேலி, செக்ஸ் போன்ற பல அடல்டு விஷயங்கள் நிறையவே இருக்கும்.கெட்ட வார்த்தைகளுக்கு பஞ்சமே இருக்காது.கதையளவில் பெரிய மெனக்கிடலும் இல்லாமல் இருக்கும்.அன்றைய தேதி வசூலை குறிவைத்தே அனைத்து கச முசாக்கலும் புகுத்தப்பட்டிருக்கும்..சில வேளைகளில், அமெரிக்காவில் டோனி டார்க்கோ போன்ற அதிசயங்கள் நிகழ்வதுண்டு.இவ்வளவு ஒரு காம்பிளிக்கெட்டான கான்ஷெப்டை படமாக்க துணிந்த்தற்கே பாராட்ட வேண்டும்.ஒரு முறை பார்த்தால் புரியும் படியான திரைப்படம் இதுவல்ல..மீண்டும் மீண்டும் பார்த்து சிந்தனையை தூண்டக்கூடியது.இவரு யாரு ? இது ஏன் நடக்குது ? என்று மனதில் கேள்விகள் பிறந்திட வாய்ப்புகள் உண்டு.


 எந்தவொரு படைப்புக்கும் கிளைமக்ஸ்-தான் ஆணிவேர்.அதை சரியாக பார்த்து காயடித்தல் என்பது கஷ்டமான ஒன்று. பல வேளைகளில் திரைப்படங்களில் டிவிஸ்ட் என்பது

"அட போங்கடா, நான் ஏற்கனவே சொன்னேலே" , "டே என்னடா எடுத்துருக்காணுங்க" என்று இனம் புரியாமல் வெராயிட்டியாக மனம் கேட்கும்..சில படங்களில் "அடடே.இவ்வளவு யோசிக்கலாமா" , "இப்படியும் பண்ணலாமா" , "எப்படியில்லாம் கற்பனை பண்றாங்க" என்றும் தோன்றும்.டோனி டார்க்கோ இரண்டாவது வகையை சார்ந்தது.அதிகமாகவே சிந்திக்கவைத்து, மூடை கிரியட் பண்ணி, ஆர்வங்களை ரைஸ் செய்து கச்சிதமாக பொருந்தக்கூடியது.யூகிப்பதுக்கு நோ சான்ஸ்..அம்புட்டுதான்.

சினிமாவை நேசிப்பவர்கள், ஃப்ரீ டைமில் யோசிக்க எதுவும் இல்லாமல் அலைபவர்கள், வித்தியாசமான ஸ்டோரி, சப்ஜெக்ட் கொண்ட படங்களை தேடுபவர்கள் கட்டாயம் ஒன்னு, மூனு, ஐந்து முறையாவது பார்க்கக்கூடிய சைக்கலோஜிக்கல் திரில்லர் டோன்னி டார்க்கோ.டோனி டார்கோ திரைப்படத்தின் கதை மற்றும் சுவாரஸ்யங்களை மேலும் தெரிந்துக்கொள்ள விருபுவர்கள் நண்பர் அருண் அவர்கள் எழுதிய விமர்சனத்தை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..இங்கே கிளிக் செய்யுங்கள்.

==================================================================
People have forgotten how to tell a story.Stories don’t have a middle or an end any more.
They usually have a beginning that never stops beginning.
                                   - Steven Spielberg @@
=====================================================================

உங்க ஆதரவோடு
Related Posts Plugin for WordPress, Blogger...