Monday 19 November 2012

சினிமா டைரி 1 : உறவும் ஜந்துக்களும்

Far From Home: The Adventures Of Yellow Dog (1995)
@ A Film By Phillip Borsos
@ Stars : Jesse Bradford , Mimi Rogers And Bruce Davison

ஒரு விடுமுறை அன்று, தூக்கம் வராமல் காலையில் தவித்த தருணத்தில் ஸ்டார் மூவிஸ் அலைவரிசை இந்த படத்தை அறிமுகபடுத்தியது.அதற்கு முன் படத்தை நான் அறிந்ததுக்கூட இல்லை..தலைப்பை பார்த்த போதே இது ஒரு அட்வெண்ட்ச்சர் படமாக இருக்கும் என்று எனக்குள்ளேயே யூகித்துக்கொண்டேன்.காலையிலேயே இந்த மாதிரி படங்கள் என்றாலே மனதுக்கு அமைதியை தரக்கூடியதாக இருக்கும் என்பது எனது கணிப்பு (ஆமா..இவரு பெரிய நோஸ்ட்ரடாமஸ்..) வீண்போகவில்லை..ஒரு அருமையான படமிது..

இத்திரைப்படத்தை பலரும் அறிந்திருப்பார்களா என்று தெரியவில்லை.அவ்வளவு எளிமையாக காலை பொழுதை அழகுப்படுத்திய நல்ல படைப்பு.ஒரு நாய்க்கும் சிறுவனுக்கும் உள்ள நட்புதான் கதை..கதை நாயகனான அங்குஸ், தன் அப்பாவுடன் கடல் வழி பயணம் மேற்க்கொள்கிறான்..அவனோடு புதிதாக கிடைத்த நாய்..திடீரென்று சில கோளாருகளால் கப்பல் தடுமாற அங்குஸும் யெல்லோ என்ற நாயும் தனிப்பகுதியில் விடப்படுகின்றனர்.அது யாருமற்ற இடம்.அங்கு ஒருவருக்கொருவர் எப்படி உதவியாக இருந்தனர் ? அந்த நாய் அங்கூஸுக்கு எப்படி எல்லாம் துணையாக இருந்தது ? இறுதியில் இருவரும் மீட்கப்பட்டனரா என்பதே கதைச்சுருக்கம்.

பல ஹாலிவுட் படங்களில் பார்த்த கதைதான் எனினும் இந்த படம் ஏதோ மனதில் செய்கிறது..வெறும் ஒன்றரை மணி நேரமே ஓடும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் Jesse Bradford, Mimi Rogers and Bruce Davison ஆகியோர் நடித்திருக்கின்றனர்.ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட கனடா நாட்டு இயக்குனரான Phillip Borsos (1953-1995) என்பவர் எடுத்த ஃபேமிலி படமிது.விமர்சக, ரசிகர்கள் மத்தியில் நடுத்தரமான வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடதக்கதாகும்.

அழகான ஒளிப்பதிவு, நடிப்பு என்று அனைத்துமே சிறப்பாக இருக்கும்.கண்டிப்பாக குடும்பத்துடன் சேர்ந்து அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படமாகும்.குழந்தைகளை நிச்சயம் கவரும்.
==============================================================================
இப்படி ஒரு தொடரை தொடங்க வேண்டும் என்பது எனது நீண்டக்கால ஆசை.நாம் எத்தனையோ திரைப்படங்களை பார்த்திருப்போம். அதில் எண்ணிலடங்கா படங்கள் நமக்கு பிடித்திருக்கும்.அதில் ஒரு சிலதே விமர்சனமாக போடா முடிகிறது.. மீதமுள்ளவை சிறு தொகுப்புகளாக, ஒரு நினைவு மீட்டலே இத்தொடர்.
==============================================================================
Gremlins (1984) - United States
@ A Film By Joe Dante
@ Stars : Zach Galligan, Phoebe Cates and Hoyt Axton

பொதுவாகவே எனக்கு, இந்த காமெடி வகையில் ஹாரர் ரசனைகளை ஆங்காங்கே தெளிக்கவிட்டு வரும் படங்கள் என்றாலே அவ்வளவாக ஆகாது.ஹாரர் என்றாலே சீரியஸ்.. அதுல என்ன காமெடி என்று கேட்கும் பயப்புள்ள நான்.ஸ்டீவன் ஸ்பீர்பெர்க் என்னை கவர்ந்த இயக்குனர்.அவரது தயாரிப்பு என்ற ஒரே காரணமே இந்த கிரேம்லின்ஸ் படத்தை பார்க்க ஏதோ என் மனம் ஒத்துப்போச்சி.அதுவும் படத்தை நான் டவுன்லோடு போடவில்லை.. சினிமெஃக்ஸ் அலைவரிசையில் பார்த்தது,

1984-ஆம் ஆண்டு ஜோய் டாந்தே அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் Zach Galligan, Phoebe Cates, Hoyt Axton போன்றவர்கள் நடித்திருக்கின்றனர்.ராண்டல் என்ற பையனால் கொண்டுவரப்படும் வினோதமான மொக்வாய் என்னும் சின்ன அழகான உயிரினத்தின் வளர்ச்சியால் ஊரெங்கும் ஏற்படும் பிரச்சனைகளே படம்..

வழக்கம் போல ஸ்பீல்பெர்க் படம்.ஆதலால், சின்ன வயசு பிள்ளைகளே படம் முழுவதையும் ஆட்சி செய்கின்றனர்.கூடவே சிரிப்பு போலிஸ் போல இந்த மோக்வாய் ஜந்து செய்யும் லீலைகள் இருக்கிறதே, இதுவெல்லாம் ஹாரர் லிஸ்டுல சேர்த்த புண்ணியவான் யாருடா என இருந்தது.
சிறந்த திரைப்படம் என்று சொல்ல முடியாவிட்டாலும், வழக்கமான ஹாலிவுட் அம்சங்களும் நிறைந்த பொழுது போக்கு படம் என்று சொல்லலாம்.வாய்ப்பு கிட்டினால், கண்டிப்பாக சிறுவர்கள் பெரியவர்கள் என்ற பேதமே இல்லாமல் கண்டு ரசிக்கலாம்.

உங்க ஆதரவோடு 

35 comments:

  1. நாய் கிளைமாக்ஸ் சாகவில்லை என்றால் சந்தோசமா பார்க்கலாம்......
    Gremlins இந்த சனிகிழமை தான் கேடிவியில் தமிழ் டப்பிங் போட்டணுக படம் புல்லா பார்த்தேன் நல்லாவே இருந்தது......

    ReplyDelete
    Replies
    1. நாய் கிளைமக்ஸில் சாகாது நண்பரே..கண்டிப்பா பாருங்க.இங்க கேடிவி எல்லாம் இல்லங்க..சன்டிவி-யில் போடுற டப்பிங் படங்கள்தான் சில வேளைகளில் பார்ப்பேன்.வருகைக்கு நன்றிங்க.

      Delete
  2. தொடர்ந்து விமர்சனம் போட்டால் என்ன

    ReplyDelete
    Replies
    1. நான் போட மாட்டேனு சொல்லலங்க..மாசத்துக்கு 13 பதிவுகள் போட்ட காலமெல்லாம் மலை ஏறி..இப்பைக்கு அப்பப்ப சில பதிவுகள் இடுறேன்..வாசித்து ஆதரவு அளிப்பதுக்கு மிக்க நன்றி.

      Delete
  3. புது பெயர், புது ஸ்டைலில் ஆரம்பித்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் மச்சி

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஹாரி..உங்க பிளாக்குக்கு கொஞ்ச நேரத்துல வருவேன்..டைட்டிலை முன்னமே பார்த்தேன்.படிச்சிட்டு கமெண்டு போடுறேன்.

      Delete
  4. 2 in 1 விமர்சனம் அருமை..... :):)
    நாய்கள் மீது எனக்கு எப்பொழுதும் அலாதி பிரியம் உண்டு...Far From Home எனது ரசனைக்கு ஏற்ற படம் போல் தெரிகிறது... கண்டிப்பாய் பார்கிறேன்...
    Gremlins, சின்னா சொன்னது போல்..இந்த வாரம் KTVயில் டப்பிங் செய்து போட்டு இருந்தார்கள்..சிறிது நேரம் தான் பார்த்தேன்..முழு படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.... :(:(:(

    ReplyDelete
    Replies
    1. மச்சி எனக்கும் எனக்கும் நாய் என்றால் ரொம்ப பிடிக்கும் அதுங்களுக்கு தான் என்னை பிடிக்காது போல எங்க பார்த்தாலும் குலைத்து கொண்டே கடிக்க வருது......

      Delete
    2. எனக்கும்தான் நண்பா..அதுவும் நாய்க்குட்டிகள் என்றாலே அப்படியே மனசுல சந்தோஷம்தான்.ஆனால், எங்க பக்கத்து வீட்டுல நடக்கிற கூத்துதான் சம்டைம்ஸ் கடுப்பேத்தும்.அதை பற்றி ஒரு பதிவு பண்ணிருக்கேன்.அப்புறம் பேசலாம்.
      கண்டிப்பா இந்த படம் பாருங்க..லேசா உங்க மனசும் ஏதாவது சொல்லும்.கிரேம்லின்ஸ் = இன்னொரு முறை வாய்ப்பு கிடையச்சா பாருங்க..தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

      Delete
    3. chinna malai @@
      குலைக்குதா கடிக்குதா - அட எல்லா நாய்க்கும் இது ஒரு பிறவி கடனுங்க..இதுவெல்லாம் ஒரு மேட்டரா எடுத்துக்கப்பிடாது

      Delete
  5. ஹை... மீண்டும் பதிவெழுத ஆரம்பிச்சிட்டீங்களா?? மிக்க மகிழ்ச்சி :-)

    //அதில் ஒரு சிலதே விமர்சனமாக போடா முடிகிறது.. //
    கொடுத்து வைச்சவர் நீங்க..நிறைய படம் பார்க்க டைம் கிடைக்குது.. எனக்கு இப்ப வாரத்துக்கு ஒரு படம் பார்க்கவே நேரமில்லாமல் இருக்கு. :-( எல்லாரும் அறிமுகப்படுத்தும், நான் பார்க்கத படங்களை “கட்டாயம் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு மறக்காமல் டவுன்லோட் போட்டு வைத்துவிடுகிறேன். அந்த லிஸ்ட் ஏறிட்டே போய் இப்ப படங்கள் 1500ம் தாண்டிடுச்சு. பார்க்கத் தான் நேரமில்லாமல் இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வந்துட்டேனுங்க..அப்பப்ப லீவு போடுவேனே தவிர விட்டுட்டு போகுறதாமெல்லாம் எப்பவும் நினைச்சது இல்லங்க நண்பா..
      ஒரு உருப்புடியான ஒலக சினிமாவை கண்ணால பார்த்து பல நாட்கள் ஆகுதுங்க.நிறைய டவுன்லோடு பண்ணியும் இருக்கு.ஒன்னன்னா பார்க்கனும்.உங்க லிஸ்ட்டு எகிறிகிட்டே போகுது.சீக்கிரம் பாருங்க..
      ஒவ்வொரு முறையும் ஆதரவு அளிக்கும் தங்களது அன்பு இதயத்துக்கு மனமார்ந்த நன்றிகள்

      Delete
    2. //1500ம் தாண்டிடுச்சு//

      அட போய்யா.. எப்படி ஒரு மணி நேரம்னு பார்த்தாலும் 1500 அதாவது 2 மாசமாவது தேவ படுமே..

      Delete
    3. //அட போய்யா.. //
      அதானே ... ஒரு மனுஷன் உண்மைய சொன்னா நம்ப மாட்டிங்களே?? இருங்க. Screenshot எடுத்தே போட்டுவிடுறேன். இங்க வாரம் 1-2 படம் பார்க்கவே நுரை தள்ளிடுது.. எப்ப பார்த்து முடிக்கப் போறேனோ தெரியல.

      Delete
    4. இந்தப் பதிவிலும் லைப்ரரி (முன்பு) படங்களப் போட்டிருக்கேன்... [அப்பாடா... ரொம்ப நாளா ஈயோட்டின பதிவ ப்ரீயா பப்ளிசிட்டி பண்ணியாச்சு :-) ]

      என்னோட பழைய பதிவு

      ஹாரி..இங்க க்ளிக் பண்ணு

      Delete
    5. இப்படி எல்லாம் இருக்கா தல.. செமையா இருக்கே.. இல்ல இவ்வளவு படம் வைச்சு இருக்கிங்களே என்பது தான் என் ஆச்சரிய குறிக்கு காரணம்..

      Delete
    6. ஏதோ இங்க ஓடுதே நான் இருக்கேனா ?

      Delete
  6. சினிமா டைரி ... பேர் ரொம்ப நல்லாயிருக்கு. என்னோட ப்ளாக் பேரையும் மாற்றணும்னு யோசிச்சிட்டு இருக்கேன். இந்த மாதிரி ஏதாச்சு ஐடியா வந்தா ஒரு மெயில், மெசேஜ் தட்டிவிடுங்க. :)

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு இல்லாத பெயரா..கண்டிப்பா மெயில் பண்றேன் இருந்தா..ஆனால் உங்க டேஸ்ட்டு எப்படின்னு தெரிலியே நண்பா//நன்றி

      Delete
    2. //ஹாலிவுட்ரசிகன்19 November 2012 20:48

      சினிமா டைரி ... பேர் ரொம்ப நல்லாயிருக்கு. என்னோட ப்ளாக் பேரையும் மாற்றணும்னு யோசிச்சிட்டு இருக்கேன். இந்த மாதிரி ஏதாச்சு ஐடியா வந்தா ஒரு மெயில், மெசேஜ் தட்டிவிடுங்க. :)//

      தலிவா அதற்க்கு முதல் இந்த PROFILE பிக்சர மாத்துங்க இதே படத்தோட சில பயலுக சுத்துறாய்ங்கப்பா

      Delete
    3. எனக்கு ரொம்பப் புடிச்ச போட்டோ இது.. அதான் சென்டிமெண்டா வச்சிருக்கேன். வேறு ஏதாவது போட்டா சிக்கினா மாத்திடலாம். :)

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. ஹாலிவுட் எண்டு ஹாரி - உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப தங்க்ஸ்..தொடர்ப்பதிவு போல தொடர்க் கமெண்ட்ஸ் போட்டு கொஞ்சம் நல்ல ஃபீலை கிளப்பி வுட்டமைக்கு..தொடர்ந்து வாங்க.

      Delete
  7. ஹாரர் என்றாலே சீரியஸ்.. அதுல என்ன காமெடி என்று கேட்கும் பயப்புள்ள நான்..அதே எண்ணம் தான் எனக்கும் .சில நாட்களாய் ஒழுங்காய் ப்ளாக் பக்கம் வர முடியவில்லை.

    ReplyDelete
  8. வாங்க சார்..வருகைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி..சீக்கிரம் பதிவோடு வாங்க.வெயிட் பண்றோம்

    ReplyDelete
  9. வணக்கம் நண்பரே மிகவும் அருமையான பதிவு தொடருங்கள் வாழ்த்துக்கள் பல பல !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே.வாருங்கள்..உங்கள் வாழ்த்துக்களுக்கும் பின்னூட்ட பகிர்வுக்கும் நன்றிங்க..உங்க பிளாக் பார்த்தேன்.பிறகு வருகிறேன்.

      Delete
  10. இந்த பதிவு ஃபார்மட் எளிமையாவும் இன்ட்ரஸ்ட்டாகவும் இருக்கு! நாய்க்குட்டி படம் கேட்குறப்பவே புடிச்சிருக்கு :)
    நல்ல ஹாலிவுட் படம் பார்த்தே ரொம்ப நாளாகுற மாதிரி ஒரு ஃபீலிங். புதுப்படங்களும் (தமிழ் தவிர) பார்க்கலை.. உங்களை நம்பி இந்தப் படத்திலாவது இறங்குகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பா..உங்களை போன்றவர்களின் ஊக்கம்தான் என்னை இன்னும் எழுத வைக்குது..அடுத்த பதிவு (50வது-ங்கோ).
      இந்த படம் அன்றைய சூழலில் அமைதியான நிலையில் பார்க்கும் போது ரொம்பவும் கவர்ந்ததுங்க..ரொம்ப நாள் முன்னாடி பார்த்து எழுதினது.நீங்க கட்டாயம் பாருங்க.மிக்க நன்றி.

      Delete
  11. எளிமையாக காலை பொழுதை அழகுப்படுத்திய நல்ல படைப்பு அறிமுகத்திற்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்..தங்களது வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  12. நல்ல படங்களைத் தொடர்ந்து அடையாளம் காட்டுங்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்க மாதிரி சிறந்த பதிவர்களின் ஆதரவு கிடைக்கும் வரை தாராளமாக படங்களை அறிமுகம் செய்யலாம்-ங்க..வருகைக்கு மிக்க நன்றி.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...