Wednesday 15 February 2012

Horror Cinema : Secret Window (2004) - நிழலுக்குள் மறைந்திருக்கும் ஆபத்துக்கள்..



Film : Secret Window   Year : 2004
Country : USA        Rating : PG - 13 (Parents Guide >)
Director : David Koepp
Writers : Stephen King (novel), David Koepp (screenplay)
Stars : Johnny Depp, Maria Bello and John Turturro
Awards : 2 nominations See more awards »

சில வேலைகளுக்கு இடையே 2004 - ஆண்டு வெளிவந்த சீக்ரட் விண்டோ என்ற சைக்கலோஜிக்கல் ஹாரர், திரில்லர் வகையில் எடுக்கபட்ட திரைப்படத்தை எச்பிஓ அலைவரிசையில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது..

   ""ஆறு மாதமாக மனைவியை பிரிந்து, யாரும் இல்லாத தனிமையான வாழ்க்கையை ஓட்டி வரும் எழுத்தாளர் மோர்ட் ரையினிக்கும், எதர்ச்சையாக தன் மீது தன்னுடைய கதையை களவாடிவிட்டதாக கூறிக்கொண்டு தன்னை மிரட்டி, தனது உடமைகளையும் உறவுகளையும் சேதப்படுத்தும் ஜோன் சூட்டர் என்பவருக்கும் இருக்கும் உணமைகளையும், பயங்கரத்தையும் தனது தொய்வில்லாத திரைக்கதை மற்றும் நடிப்பால் கூறும் படம் சீக்ரட் விண்டோ"""

படத்தின் மிக முக்கியமான மோர்ட் ரையினி என்னும் திரை கதாபாத்திரத்தில் ஜோன்னி டெப்..

 இவரை அறிந்திராத ஹாலிவுட் ரசிகர்கள் மிகவும் குறைவு..Pirates of the Caribbean திரைப்பட தொடர்களின் மூலம் உலக புகழ்பெற்ற திறம் வாய்ந்த நடிகர் .ரொம்பவும் பிடித்தமான நடிகர்.பல தரப்பட்ட கேரக்டர்களில் முத்திரை பதித்தவரான ஜோன்னிக்கு, இந்த பட ரோல் எல்லாம் எம்மாத்திரம் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்..தெ சைனிங்கில் ஜேக் நிக்கல்சன் அவர்கள் நடித்த ஏறக்குறைய அதே மாதிரியான வேடத்தில், ஆறு மாதங்களாக யாருடனும் பெரிதாக ஒட்டாத, மனைவியின் கள்ள காதலை அறிந்துக்கொண்ட சாதாரணமான எழுத்தாளராக வந்து அசாதாரணமான நடிப்பை, ஒவ்வொரு முகபாவனைகளிலும் அசைவுகளிலும் வெளிபடுத்தி மனதுக்கு மிக பெரிய ஆறுதலை கொடுக்கிறார்..இறுதி காட்சிகளில் இவரது கண்கள் இருக்கிறதே "பணம் கொட்ட வேண்டும்" இந்த நடிகனுக்கு..ஆனால் 80 ஆம் ஆண்டுகளிருந்து   நடித்து வரும் ஒரு சிறந்த நடிகனுக்கு இன்றுவரை ஆஸ்கர், எட்டாத கனியாக இருப்பது வியப்போடு கலந்து வருத்ததை அளிக்கிறது..

நடிப்பளவில் இத்திரைப்படத்தின் கூடுதல் பலமாக John Turturro, Timothy Hutton மற்றும் Maria Bello ஆகியோரை கூறலாம்.இதில் முதல் இரண்டு நடிகர்கள் இந்த படத்தில் கிடைத்த அறிமுகங்கள்..மரியோ பெல்லோவை பலருக்கும் தெரிந்திருக்கும்..நல்ல நடிகை.

இயக்குனர் David Koepp - Panic Room (2002), Angels & Demons (2009), Mission: Impossible (1996), Spider-Man (2002) போன்ற பல படங்களுக்கு திரைக்கதை அமைத்து இன்று நல்ல இயக்குனராக உருவெடுத்துவருபவர்.. ஜுராஸிக் பார் படத்தின் வழி உலகளவில் பிரபலமானவர். இவரது இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வந்திருக்கும் சீக்ரட் விண்டோ, கடந்த பத்தாண்டுகளில் உருவான நல்ல ஹாரர், திரில்லர் படங்களில் ஒன்றாக சொல்லலாம்.அதே நேரம் ஹாரர் படங்களை கரைத்து குடித்திருக்கும் ரசிகர்களுக்கு, இந்த படம் மொக்கையாகவும் அமையலாம்..//எப்படியோ பார்த்துட்டு பின்னூட்டத்துல சொல்லுங்கப்பா..//      


""The most important part of a story is the ending."
இது படத்தின் டேக்லைன் மட்டும் கிடையாது..படத்தின் உயிர் நாடியே இதுதான்..படம் ஆரம்பித்த அரை மணி நேரத்திலேயே த்ரில்லர் வெறியர்கள்  கண்டிப்பாக ஓரளவாவது கிளைமக்ஸை ஊகிக்கலாம்.அந்த வகையில் கொஞ்சம் வசதியாகவே தடயங்கள் வைத்து படத்தை நகர்த்தியுள்ளனர்.அதுவும் வலை தொடங்கியதிலிருந்து வழக்கத்துக்கு அதிகமாகவே சஸ்பென்ஸ் திரில்லர் என்று பார்ப்பதால் படம் போன முதல் 40 டூடூ 50 நிமிடங்களுக்குள்ளேயே டிவிஸ்டை உணர முடிந்தது..படம் பார்ப்பவர்களை நோகடிக்காத அதைவிட முக்கியம் ஏமாற்றாத விதத்தில் டிவிஸ்ட் அமைந்திருக்கும் ..மறுபடியும் (முன்னால எப்ப சொன்ன..) சொல்கிறேன் ஜோன்னி டெப்தான் படத்தோடு டபல் டிரீட்..
    
       திரைப்படத்தில் நிறையவே நல்ல காட்சிகள் ரசிகர்களுக்கென்று திரில்லாக மெனக்கட்டு ஏதோ பண்றேனு, நல்லாவே செய்து இருக்கிறார்கள்..முதல் காட்சியிலேயே "போவோமோ??போக வேணாமானு" 

ஏதோ ஒரு மாதிரி ரையினி மனதுக்குள்ளேயே பேசிக்க நம்மல எங்கயும் போகவிடாத மாதிரி ஸீனு ஸீனா பார்த்து தைச்சிருக்காங்க படக்குழுவினர்கள்..அதுவும் எந்த ஊசியும் நூலும் இல்லாம..//// படத்தின் சில சுவாரஸ்யமான காட்சிகளை சொல்ல வேண்டாம் என்று தவிர்க்கிறேன்..அப்பதான் திரில்லா..இருக்கும்...(அட அப்படியா??))

எழுத்தாளர் ஸ்டீபன் கிங், சினிமா மற்றும் புத்தக பிரியர்கள் பலருக்கும் அறிமுகமானவரே..  ஹாரர் படங்களுக்கு என்றே இயக்குனர்கள் ஜோன் கார்ப்பெண்டெர், சாம் ராய்மி போன்றவர்கள் எப்படியோ, அதே மாதிரி எழுத்து துறையில் தலைவர்தான் A TO Z..ஹாரர், சஸ்பென்ஸ் என்று ஒரு என்சைக்கலோபீடியாவாகவே வாழ்ந்து வருபவர்..2004 - ஆம் ஆண்டு இவர் எழுதிய நாவலை படமாக்கி இருக்கின்றார் இயக்குனர்.பல நல்ல கதைகளை படம் பண்றேனு சொல்லிட்டு..புகை ஊதுறேனு அதாங்க ரீலு..ரீலு - வுடற படங்களுக்கு மத்தியில் இந்த படத்த(யாவது) உருப்பிடியா எடுத்த பெரிய மனிதர்களுக்கு சில நமஸ்க்காரங்கள்..

விமர்சனங்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு இல்லையென்றாலும் 50, 60 சதவீதமாவது விமர்சக மற்றும் ரசிகர் பெருமக்கள் இடையே ஏற்றுக்கொள்ளபட்டது என்றே சொல்லவேண்டும்..உலகளவில் $92,913,171 வசூல் செய்த தொகையை இதற்கு சான்றாக கூறலாம்..
ஒரு முறை பார்த்த பிறகு இன்னொரு முறையும் பார்க்க தூண்டும் வகையான படமிது..சில வேலை காரணமாக ஒரு தடைவையே பார்க்க முடிந்தது...எச்பிஓ - வில் திரும்ப திரும்ப ஒளிப்பரப்பினாலும் பார்க்க நேரம் கிட்டுமா என்பது சந்தேகம்தான்..பட்..நீங்க மிஸ் பண்ணாதிங்க..வாய்ப்பு கிடைப்பின் பார்க்க வேண்டிய படமே..

@ பார்க்க வேண்டிய நேரம். : நள்ளிரவு (குட் நைட்)
@@ பார்க்க கூடாத நேரம் :: பட்டப்பகலில்.. (அட வேலை இல்லாட்டாலும்)
@@@ யார்//யாரோட பார்க்கலாம் ::: 15, 16 வயச கடந்தவங்க..
@@@@ எதுக்காக பார்க்கலாம் :::: மற்றவங்களோட எழுத்த களப்புனா என்னவெல்லாம் நடக்கும் என்பதை அறிய,,

'சோஓ..மொத்தத்தில், சீக்ரட் விண்டோ : பார்த்துட்டு சாத்திட்டு வந்து தூங்குங்க..

IMDB RATING : 6.5 / 10

MY RATING : 6.5 / 10 : Twist & Turns

நியூஸ் டெலிவரி : இந்த படத்தின் கதையை மாதிரியே (நால்லா கேட்டுக்கோங்க மாதிரிதான்)) நிறைய படங்கள் வந்துள்ளதாக படம் பார்த்த என்னோட ஐன்ஸ்ட்டின் மூளை யூகித்தது..என்னோட மூள என்னிக்கு தோற்றது சொல்லுங்க ?? சில நாட்களுக்கு முன்னாடி இணையத்தில் தேடும் போதுதான் பல படங்கள் இதே மாதிரி கதையில வந்ததா தெரிந்துக்கொண்டேன்..ஆனா ஒன்னு..பெரும்பாலான எல்லா படமும் 2004 - ஆம் ஆண்டுகளுக்கு முன்னாடி 60's, 70's, 80's, 90's எடுக்கபட்டவையாம்..அட அப்பயே எவ்வளவு பெரிய ஜீனியஸ் எல்லாம் யோசித்திருக்காங்க..ஹி..ஹீ.. டைம் கிடைப்பின் இனி வரும் வசந்த காலங்களில் எப்பயாச்சும் ஒவ்வொரு பார்வைகளாக பார்க்கலாம்.. 
==================================================================       

 ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்....மேலும், தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமெனின் ஓட்டளித்து ஊக்கமளியுங்கள்.சிறந்த ஆதரவுகளே சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு,

Tuesday 7 February 2012

Liebster Blog Award - அவார்டு கொடுக்க போறேன்..வாங்கங்கோ வாங்கோ.

@@ முதலில் வருகை தந்திருக்கும் பெரியவர்களுக்கும் வாசக நண்பர்களுக்கும் ஒரு ஸ்வீட்டான, இனிமையான, மகிழ்ச்சியான, சந்தோஷமான, (ச்சே சரிதான் விடுடா ரொம்பதான் தூசி தட்டுற..) வணக்கமுங்க..@@ 


முன் குறிப்பு : 
(1) என்னுடைய கதை..ஆரம்ப கதை..சோக கதை.வரலாற்று கதை.
(2) எனக்கு இந்த விருதை வழங்கியவருக்கு அன்பு காணிக்கை          
(3) விருதை பற்றிய சிறிய அறிமுகம் (கட்டாயம் படிக்க வேண்டியது
================================================================

(1)   நல்லாவே இந்த ஞாபகம் மூளையில தாண்டவம் ஆடுது..சரியாக ஒரு வருடத்துக்கும் மேலாக ஆகிறது..தமிழ்ப்பதிவுலகில் நானும் வாசகனாகி..அதுவரை ஹாலிவுட், தமிழ் மசாலா படங்களுக்கு அடிமையாகி போன என்னை புதிய சினிமா உலகுக்கு இந்த தமிழ்ப்பதிவுலகம் அழைத்து வந்தது.சினிமா மீது உண்மையான மரியாதை பிறந்தது..சினிமா பற்றிய கட்டுரைகள் விமர்சனங்கள் என்று விடாது கிடைத்தவற்றை படிப்பதோடு பிடிஎஃப் கோப்புகளாக சேமிக்க தொடங்கிய காலக்கட்டம் அது..மனதை தட்டி எழுப்பியது.பள்ளி நேரமும் பாடமும் போக மீதி நேரங்களில் எடுத்து வைத்தவற்றை படிக்கலானேன்..ஆர்வங்கள் நிறையவே..இந்த தமிழ் தங்க சினிமா பதிவுகள் எந்தன் பார்வைகளுக்கு திரை வடிவங்கள் கொடுத்தன.அதுவர யூத்யூப் வீடியோக்கல் என்று இருந்த என்னை, இந்த ஆர்வங்கள் பல இணையத்தளங்களையும் மென்பொருள்களையும் பதிவிறக்ககளை நோக்கியும் பயணிக்க வைத்தன.இதனது தொடக்கமே புதிய சினிமா..புது வடிவம்.மெல்ல மெல்ல விமர்சனங்களை படிக்க படங்களை பார்க்க தொடங்கினேன்.

என்னுள் பல புதிய மாற்றங்கள்.
         .ஏன் நானும் ஒரு வலைப்பூ தொடங்கக்கூடாது,,.?? எனக்கு தோன்றியவற்றை ஏதோ ஒரு வடிவில் பதிவுச்செய்ய விரும்பினேன்.ஒரு பள்ளி விடுமுறை அதற்கு வழி வகுந்தது..சென்ற ஆண்டு (2011) செப்டம்பர் 2 ஆம் திகதி " எண்ணங்களும் திரைவண்ணங்களும் " என்ற பெயரில் தொடங்கியதுதான் இந்த வலைப்பூ..பதிவுலகத்தை வாசகனாக தொடங்கிய பயணத்தில் பதிவுலகில் ஒரு உறுப்பினராக சேர்ந்துவிட்டு அடுத்து என்ன செய்வதென்று கூட அறியாது தொடர்ந்து சில பதிவுகள் இட்டேன்..ஆதரவுகள் கண்களை எட்டின, கருத்துக்கள் மனதை ஊக்குவித்தன..எழுதினேன்..இன்றுவரை தொடர்கிறேன்./உங்களை போன்றவர்களின் ஆசியில்..

என் மீதான இன்றைய பார்வைகள் மிக தாமதமாக ஏற்பட்டவை என்பதை இங்கு குறிப்பிட இழைகிறேன்.அதற்கு காரணமும் நானே என்பதில் துளியும் சந்தேகமில்லை.
========================================================================

(2) சரி விடு பயப்புள்ள வுட்டா சீரியலா வச்சி கழுத்த அறுப்ப போல..மெய்ன்ஸ்டிரீமா மேட்டருக்கு வாரியா ??

முனு நாலு இருக்கும்..ராத்திரி ரொம்ப சந்தோஷமா கண்ண மூடுனேன் (அட..தூக்கங்க..நீங்க அவசக்கொணமா வச்சிக்காதிங்க)..அதற்கு முழுமையான காரணம் நம்ம பிரபல பதிவர் நம்ம நண்பர் ஹாலிவுட் ரசிகர்தான்//திடீரென்று வந்து ஒரு பின்னூட்டம் ""இந்த மாதிரி...இந்த மாதிரிங்க..ஒரு அவார்டுங்க.அதை எனக்கு கொடுத்தாங்க..அதை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்"" (இது என்னோட வார்த்தைகள்..அவரு ரொம்ப அழகா போட்டிருந்தாறு) என்று இருந்தது..உடனே அவருடைய போஸ்ட்டுக்கு செல்ல அழகான முழுமையான விளக்கங்கள் அவருடைய பாணியில் சிறப்பாக இருந்தது..அதில் அவர் இந்த விருதை பகிந்துக்கொண்ட ஐந்து பதிவர்களில் எனது வலைப்பூவும் இருந்தது..

  @@ என்னுடைய ஒவ்வொரு பதிவுக்கும் (நான் எவ்வளவு தாரு மாறா எழுதி வச்சாலும்) நல்லாருக்கு என்று சில வார்த்தைகளால் என் நெஞ்சை நிரப்பிய அன்பு நண்பர் ஹாலிவுட் ரசிகரே...தங்களுடைய விருதை மனதார பகிர்ந்துக்கொள்வதோடு நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.நன்றிங்க. @@

என்னைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு பதிவர்கள் தத்தம் பாணியில் சிறப்பான எழுத்து வண்ணங்களை தமிழாக வழங்கி வரும் போது, எனது எழுத்தையும் மதித்து பகிர்ந்ததில் என் மகிழ்ச்சியை உங்களுக்கு கூறிக்கொள்கிறேன் நண்பரே..

ஹாலிவுட் ரசிகர் : http://hollywoodrasigan.blogspot.in/ 
===================================================================================


(3) 'லீப்ஷ்டர்வலைப்பதிவர்களுக்கு ஜெர்மனியில் வழங்கப்படுகின்ற விருதாம்..அதனது அர்த்தம் 'மிகவும் பிடித்த என்பதாகும்'. "இதைப் பெறுபவர், மேலும் தான் விரும்பும் 5 இளம் வலைப்பூக்களுக்கு அதாவது 200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள வலைகளுக்கு விருது வழங்க வேண்டும். இதை தாங்கள் ஏற்றுக் கொண்டதன்  அடையாளமாக அதன் படத்தை தங்கள் வலையில் காப்பி  -பேஸ்ட் செய்து கொள்ளவும்.அந்த தொடர் சங்கிலியை உடைத்து விடாமல் மறவாமல் 5 பேர்களுக்கு வழங்கி புளங்காகிதம் அடைக."

Rules :

•Thank your Liebster Blog Award presenter on your blog.
•Link back to the blogger who presented the award to you.
•Copy and paste the blog award on your blog.
•Present the Liebster Blog Award to 5 blogs of 200 followers or less who you feel deserve
to be noticed. (Some say just 3 or more blogs of less than 200 followers each).
•Let them know they have been chosen by leaving a comment at their blog.
===========================================

(4) அவர் சொன்ன இந்த சங்கிலியை இங்கிருந்து தொடர்கிறேன்..அந்த ஐந்து பதிவர்களின் விபரங்கள் பின்வருமாறு.

(1) தமிழ் சினிமா உலகம் (சாவி) - சமீபத்தில் கிடைத்த ஒரு சிறந்த அறிமுகம்.வலை தலைப்புதான் தமிழ் சினிமா என்று இருக்கிறதே தவிர, ஹாலிவுட், தமிழ், தெலுகு என்று அனைத்து பிரிவுகளீலும் பின்னிப்பெடலை எடுக்கிறார்.சினிமாவின் மீதான இவரது காதல், இவர் வலையை பார்த்தாலே தெரியும்.இரண்டே நாளில் ஐந்து விமர்சனங்கள் எழுதி கலக்கிட்டாருன்னா பாருங்க..

(2) என் கிறுக்கல்கள்..(பிரசன்னா கண்ணன்) - சில மாதங்களுக்கு முன்பு கிடைத்த அறிமுகம்தான் என்றாலும்..அவரது பதிவுகள் சிலவற்றை படித்ததன் வழியே பெரிய ரசிகன் ஆகிவிட்டேன்..நான்கு ஆண்டு காலமாக பதிவுலகத்தில் இருந்து வருபவர்..குறைவாக எழுதினாலும் நிறைவாகவே எழுதுகிறார்.சினிமா, திரை இசை, என்று பல பிரிவுகளில் எழுதி வருகிறார்.அல்பிரட் ஹிட்ச்காக் பற்றி இவர் எழுதிய பதிவு, எனக்கு ஒரு இன்ஸ்பிரஷன்.இவர் அதிகமாக எழுத வேண்டும் என்பது என்னுடைய அவா.. 

(3) பாரதிக்குமார் - திடீரென்று ஒரு நாள் எதர்ச்சையாக இவரது வலைப்பூவுக்கு செல்ல, இவரது எழுத்துக்கு பரம ரசிகனானேன் என்பதே உண்மை.அயல்மொழி திரைப்பட விமர்சனம், சிறுகதை, கவிதை என்று என்ன வேண்டும் உங்களுக்கு..அத்தனையும் எளிதான தமிழிலும் சிறப்பான எழுத்து நடையும் இவரது வலையில் கொட்டிக்கிடக்கின்றன.இவர் ஒரு கவிஞர் என்பதை எழுத்துக்களே நிரூப்பிக்கின்றன..

(4) udanpirappe (Ravi Shankar) @@ பிறந்தோம்னா ஏதாவது சாதிக்கணும்,இல்லைனா இப்படி வலைப்பூவ ஆரம்பிச்சிடணும் ! @@ - இதுதாங்க இவரோட வார்த்தைகள்..இவரை ரொம்ப நாளாகவே தெரியும்.நன்றாக தொடர்ந்து எழுதி வருபவர்..சினிமா, சிறுகதைகள், சமூகம் என்று அத்தனையிலும் கலக்கி வருபவர்.இப்பக்கூட இவரோட வலையில அப்பா - மகன் சிறுகதை ஒன்னு பண்ணிருகாரு.. படிக்காதவங்க டக்குன்னு போய் படிச்சு ஃபால்லோவெர் ஆகிடுங்க

(5) The Good Stranger - கடந்த நான்கு வருடங்களாக எழுதி வரும் சூப்பர் பதிவாளர்..நகைச்சுவை, கவிதை, சினிமா விமர்சனம், சிறுகதைகள் என்று பலவிதமான பதிவுகளை அருமையாக எழுதி வருபவர்.இவருடைய அதிகமான பதிவுகளை படித்ததில்லை..ஆனால், சிறப்பாக இருக்கும்..இதுவரை 116 FOLLOWERS இருக்காங்கனா பாருங்க.

 சோ..இதன் மூலம் என்னோட ஐன்ஸ்டன் மூளை சொல்ல வருறது என்னானா..பதிவர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்..மற்றும் இதுவரை என்னுடைய எழுத்துக்கும் ஆதரவு வழங்கிவரும் வாசகர்களுக்கு நன்றிகள்.சரிங்க இதோடு இந்த விழாவை விட்டு விடைப்பெறுவோமா ?? பை..பை. 
====================================== 

ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்....மேலும், தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமெனின் ஓட்டளித்து ஊக்கமளியுங்கள்.சிறந்த ஆதரவுகளே சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு,

Related Posts Plugin for WordPress, Blogger...